Tuesday, June 17, 2008

உடன்பிறப்பே, நல்ல செய்தி வந்தேவிட்டது.. !

அமர்க்களமாக நடந்து முடிந்துள்ளது கழக மகளிர் அணி மாநாடு. கடலூரையே கலக்கிய மாநாட்டின் வெற்றி செய்தி வந்துவுடன் அடுத்த நல்ல இனிய செய்தி கழகத்தினர் அனைவருக்கும் கிடைத்திருக்கிறது.

அது தான் பா ம க கூட்டணியில் இருந்து நீக்கப்பட்டது.

நட்பு, கூட்டணி என்று சொல்லிகொண்டே, கழக உடன்பிறப்புக்களுக்கு எதிராக செயல்பட்டதும், கழக அரசை அனைத்து விஷயங்களிலும் குறை சொல்லிக்கொண்டும், தலைவரின் அனைத்து அரசியல் முடிவுகளுக்கும் நக்கல் செய்துக்கொண்டும், நல்ல திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டும் மலிவான அரசியல் நடத்தி விளம்பரம் தேடிக்கொண்ட டாக்டர் கொய்யா.. அய்யா வின் பா ம க எப்போதோ விலக்கப்பட்டிருக்க வேண்டிய கட்சி.. லேட்டான முடிவு என்றாலும் தலைவர் லேட்டஸ்ட்டான முடிவு எடுத்துள்ளார். நிச்சயம் மருத்துவர் ஆடித்தான் இருப்பார்.

அவருக்கு என்ன 3 வருடத்துக்கு ஒரு கூட்டணியில் இருப்பார்.. அடுத்து ஓடிப்போய் அம்மாவுடன் சேருவார்... உடனடியாக இருக்காது. ஏனெனில் அன்புமனியின் பதவி போய்விடுமே.. 2009 பாராளுமன்ற தேர்தலில் ஓடிவிடுவார்.. ஓடட்டும்..

.... வலம் போனால் என்ன., இடம் போனால் என்ன, மேலே விழுந்து புடுங்காமல் இருந்தா சரி..

Thursday, June 12, 2008

கலைஞர் - 75

தலைவர் கலைஞர் அவர்கள் தன் 75 வது பிறந்தநாளில் விடுத்த செய்தி.

என் வாழ்க்கைப் பயணத்தில் எழுபத்து ஐந்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. என்பால் பாசங் கொண்டோர் - பற்று மிகுந்தோர் - உடன்பிறப்பாக எனையேற்றுக்கொண்ட உயிரினும் மேலானோர் அனைவருமே உலகின் பல்வேறு மூலைகளில் இருந்து பாலும், தேனும் கலந்த பாராட்டுதல்களையும் வாழ்த்துகளையும் இந்தப் பவள விழாவில் குவிக்கின்றனர். அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி கோடி கோடியாக!
வாழ்ந்துவிட்டேன் எழுபத்து ஐந்து ஆண்டு காலம் - இனி வாழப் போகிற எஞ்சிய காலமும் - என் உயிரினும் மேலான உடன் பிறப்புகளுடன் இணைந்து நின்று நாட்டுக்காக உழைத்து, அமைதியும் அன்பும் பூத்துக் குலுங்கும் நல்லதொரு சமுதாயம் நிலைபெற்று விளங்கிட இந்தப் பவள விழா நாளில் என் தொண்டினை மேலும் தொடர்கிறேன். "
- கலைஞர்

Tuesday, June 10, 2008

இன்றைய தே மு தி க தலைவர் விஜயகாந்த் திருமணம்

தே மு தி க தலைவர் விஜயகாந்த் , பிரேமலதா திருமணத்தை நடத்தி வைத்தது நம் தமிழினதலைவர் டாக்டர் கலைஞர்.


கலைஞர்

தந்தையார் பெயர் - திரு முத்துவேலர்

தாயார் பெயர் - திருமதி அஞ்சுகம் அம்மையார்

பிறப்பு - ஜுன் 3, 1924

பிறந்த ஊர் - திருவாரூர் மாவட்டம் , திருக்குவளை

***************************************************************
11 முறை தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றிப்பெற்று சாதனை படைத்த ஒரே தலைவர் டாக்டர் கலைஞர். போட்டியிட்ட வருடமும், தொகுதிகளும் கீழ்வருமாறு

1957 - குளித்தலை
1962 - தஞ்சாவூர்
1967 - சென்னை சைதாப்பேட்டை
1971 - சென்னை சைதாப்பேட்டை
1977 - சென்னை அண்ணா நகர்
1980 - சென்னை அண்ணா நகர்
1989 - சென்னை துறைமுகம்
1991 - சென்னை துறைமுகம்
1996 - சென்னை சேப்பாக்கம்
2001 - சென்னை சேப்பாக்கம்
2006 - சென்னை சேப்பாக்கம்
***************************************************************
தமிழக முதலமைச்சராக கலைஞர் அவர்கள் 5 முறை பொறுப்பேற்றுள்ளார். வருடங்கள் கீழ்வருமாறு

1969 - 1971
1971 - 1974
1989 - 1991
1996 - 2001
2006 -

***************************************************************
முதலமைச்சர் பொறுப்பு தவிர்த்து அவர் சட்டசபையில் வகித்த பதவிகள் பின்வருமாறு

1962 - 1967 - எதிர்கட்சி துனைத்தலைவர்
1967 - 1969 - பொதுப்பனித்துறை அமைச்சர்
1977 - 1980 - எதிர்க்கட்சித்தலைவர்
1980 - 1983 - எதிர்க்கட்சித்தலைவர்
1984 - சட்டசபை மேலவை றுப்பினர்
***************************************************************